மீண்டும் விலை உயரும் அபாயம்.. கச்சா எண்ணேய் விலை மீண்டும் ஏறலாம்.. குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : இந்தியாவின் பணவீக்க விகிதத்தின் அடிப்படையீல் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது நடப்பு வருடத்தின் இரண்டாவது முறையாக இந்த வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்க தாகும். இதன் மூலம் இந்தியாவின் பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் என்ற யூகமே நிலவி வருகிறது. இதனால் இந்திய சந்தைகளில் ஆயில் விலை மீண்டும் உயரவே வாய்ப்பு உள்ளது.

 

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், மந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதன் மூலம் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எப்படியேணும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டில் மட்டும் இரண்டு முறை வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தே வர்த்தகமாகி வருகிறது.

இதனாலேயே இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனர் சக்தி காந்த தாஸ் நடப்பு ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ந்து இரு முறை வட்டி விகிதத்தை முறையே 0.25 விகிதங்களாக குறைத்தார். ஆனால் அதேசமயம் சில பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்காததால் இந்த வட்டிக் குறைப்பு மேலும் குறைக்கப்படலாம் என்றும் கூறியுள்ளனர். அதே சமயம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பணவீக்க விகிதம் 2.5 சதவிகிதத்திலிருந்து 2.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதே.

பணவீக்க விகிதம் அதிகரிக்கும்

பணவீக்க விகிதம் அதிகரிக்கும்

பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த சில வாராங்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் இந்த விலை அதிகரிப்பு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் சவாலாகவே உள்ளது. இதானல் பணவீக்கத்திற்கும் இது ஒரு ஆதாரமாக உள்ளது என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

ஓபக்- உற்பத்தி குறைப்பு

ஓபக்- உற்பத்தி குறைப்பு

பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் அமைப்பான ஓபக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை, உலகில் இருந்ததை விட தற்போது பாதியாக குறைத்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் தேவை அதிகரிப்பின் மூலமாக விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

அமெரிக்க - சீனா ஒப்பந்தம்
 

அமெரிக்க - சீனா ஒப்பந்தம்

உலகின் பொருளாதார முன்னணி நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வரும் வர்த்தக தொடர்பான சிக்கல்கள் தற்போது ஓரவுக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் அமெரிக்கா - சீனாவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த இரு நாடுகளும் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என்றும், இதனால் அந்தந்த நாடுகளில் கச்சா எண்ணெய் நுகர்வு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாயின் மதிப்பில் மாற்றம்

ரூபாயின் மதிப்பில் மாற்றம்

கடந்த மார்ச் மார்ச் மாதத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளில் உள்ள கரன்சிகளில் இது சிறந்ததொரு மாற்றத்தை கண்டுள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாகும். இதன் மூலம் இந்தியாவில் வளர்ச்சியை நாம் அறிய முடிகிறது. மேலும் வலுவடைந்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே உதாரணமாகும். இருப்பினும் இறக்குமதி செய்யப்படும் ஆயிலுக்கு வர்த்தக வரிகள் அதிகமாக இருப்பதும் இந்த விலையேற்றத்திற்கு ஒரு காரணமாகவே உள்ளது.

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

அண்மையில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இதுவே ஹெச்.எஸ்.பி.சி மற்றொரு அறிக்கையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் 7 சதவிகிதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன் மூலம் உயர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி, பணவீக்க விகிதத்திற்கு தடையாக இருக்கும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். எனினும் வரும் வாரங்க்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தே வர்த்தகமாகலாம் என் கின்றனர் வர்த்தகர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil prices are climbing again and that bad inflation

A rebound in oil prices pushes a risk to India’s benign inflation expectations that last week allowed the central bank to deliver its second rate cut of 2019. at that samae time crude at a five-month high. so many investors are less confident about the Reserve Bank of India’s pace of monetary easing, also slowdown in economic growth and subdued inflation still support.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X