தடைகளை தகர்த்து சாதனை படைத்த இண்டிகோ.. தினசரி 1,500 விமானங்கள் இயக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஹரியானாவை அடிப்படையாகக் கொண்ட இண்டிகோ நிறுவனம் மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை வழங்கி வரும் நிறுவனமாக இருந்து வந்தது.

அதிலும் உள்நாட்டு சந்தை மதிப்பில் அக்டோபர் 2019ன் படி, 47.7 சதவிகித பங்குகளை வகித்து வருகிறது. இந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் ஒரு நிறுவனம் இண்டிகோவாகும்.

தடைகளை தகர்த்து சாதனை படைத்த இண்டிகோ.. தினசரி 1,500 விமானங்கள் இயக்கம்..!

கடந்த 2018 - 2019ம் நிதியாண்டின் படி, 64 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த நிலையில் இந்த நிறுவனம் மொத்த 83 இடங்களுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இதில் 60 உள்நாட்டு விமான சேவையையும், 23 சர்வதேச விமான தளங்களுக்கும் வழங்கி வருகிறது.

இப்படியொரு நிலையில் ஒரு நாளைக்கு 1,500 விமானங்களை இயக்கும் முதன்மை இந்திய விமான நிறுவனமாக தலையெடுத்துள்ளது இண்டிகோ. தினசரி சேவையில் கடந்த டிசம்பர் 2018ல் வெறும் 1000 விமானங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது 1,500 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமான நிறுவனம் தற்போது 249 திட்டங்களை கொண்டுள்ள நிலையில் 23 சர்வதேச நாடுகள் உள்பட 83 இடங்களுக்கு தனது சேவையை வழங்கி வருகிறது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி 1,500 விமானங்களை இயக்கும் நிறுவனம் என்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் விமான நிறுவனத்தில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு விமானம் புறப்படும் என்றும் இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு பல கூட்டாண்மைகளை கொண்ட ஆர்டர்கள் மற்றும் பல மைல் கற்களைக் கொண்ட ஒரு நிகழ்வான ஆண்டாகும். ஆக 2020 பற்றி நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலும் இந்தியாவை பல்வேறு உலக நாடுகளுடன் இணைப்பதே எங்களின் முயற்சி என்றும் தத்தா என்றும் கூறியுள்ளார்.

மேலும் எங்களது விமானங்களில் ஒரு நாளைக்கு 2.50 லட்சம் பயணிகளுக்கு மேல் பயணிக்கிறார்கள். எங்களது சேவைகளை அதிகரிப்பதன் மூலம் வர்த்தகம் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே எங்களின் நோக்கம் என்றும் தத்தா கூறியுள்ளார்.

உள் நாட்டு சந்தையில் ஷில்லாங்க், கயா, ஜோத்பூர், பெல்காம், சில்சார், ஷீரடி மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமான சேவைகளைத் தொடங்குவதை விட, இண்டிகோவும் ஐரோப்பிய சந்தையில் இஸ்தான்புல், ஜெட்டா, செங்டு, யாங்கோன், ஹனோய், ரியாத், ஹோ சி மின் நகரம் மற்றும் குவாங்க்சோ உள்ளிட்ட பகுதிகளுக்கும் இண்டிகோ நுழைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: indigo இண்டிகோ
English summary

Indigo becomes first Indian carrier to operate 1,500 flights per day

Indigo becomes first Indian carrier to operate 1,500 flights per day. Indigo flow 1000 flights daily services in December 2018. Currently its operate 83 destination, including 23 international flights.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X