மோடியை காப்பாற்றிய மூடி.. 14 வருடத்திற்கு பின் இந்தியாவின் தரம் உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான மூடி'ஸ் இன்வெஸ்டார் சர்வீஸ், இந்தியாவின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய தரத்தை 14 வருடங்களுக்குப் பின் உயர்த்திச் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய சந்தையின் மீது புதிய நம்பிக்கையை வளர்த்துள்ளது.

மூடி'ஸ் அமைப்பு, கடைசியாக அடல் பிஹாரி தலைமையிலான பிஜேபி கட்சி ஆட்சியில் இருக்கும்போது தரத்தை உயர்த்தியது, அதன் பின் தற்போது மோடி தலைமையில் பிஜேபி ஆட்சியில் இருக்கும்போது 14 வருட இடைவேளையில் இந்தியாவின் நாணய தரத்தை உயர்த்தப்பட்டுள்ளது.

நாணய தரம்

நாணய தரம்

மூடிஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய தரத்தை Baa3யில் இருந்து Baa2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் பொருள் சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் ஏற்ற இறக்கம் தற்போது பாசிடிவ் நிலையில் இருந்து ஸ்டேபிள் என்ற நிலைக்குச் சென்றுள்ளது, அதாவது நிலையான அளவிற்குச் சென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

அதேபோல் உள்ளூர் நாணய உயர் பாதுகாப்பற்ற குறியீட்டின் தரத்தையும் Baa3யில் இருந்து Baa2 ஆக உயர்த்தியுள்ளது. மூடி தற்போது தரத்தை உயர்த்த என்ன காரணம்.?

 

இதுதான் காரணம்..?

இதுதான் காரணம்..?

அடுத்தச் சில வருடங்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளது, அதுமட்டும் அல்லாமல் அரசின் நிதிதேவைக்கு அதிகளவிலும், நிலையான கடன் அளிப்புத் தளம் உள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து கடன் அளவு அதிகளவில் குறையும். இதனை மையமாக வைத்தே நாணய தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

ஆயினும் இந்தியாவின் அதிகளவிலான கடன் சுமை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்பதையும் உணர்த்தியுள்ளது. மேலும் கடன் அளவைக் குறைக்காவிட்டால் நாட்டின் வளர்ச்சியும், பொருளாதாரமும் அதிகளவில் பாதிக்கப்படும் எனவும் மூடி கூறியுள்ளது.

புதிய திட்டங்கள்

புதிய திட்டங்கள்

இந்திய அரசு தற்போது பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிறுவன வளர்ச்சியில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை அறிவித்துள்ள பெரும்பாலான திட்டங்கள் இன்னமும் டிசைன் வடிவத்திலேயே உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் வளர்ச்சி

நாட்டின் வளர்ச்சி

2017-18ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஆயினும் 2018-19, 2019-20ஆம் நிதியாண்டுகளின் நாட்டின் மொத்த ஜிடிபி அளவீடு 7.5 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மோடி

மோடி

மூடி அமைப்பு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் இன்னமும் வடிவமைப்புத் தளத்திலேயே உள்ளது, இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வித பயனுமில்லை, ஆனால் நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகள் மீது பெரிய அளவிலான நம்பிக்கையை வைத்துள்ளது.

மூடிஸ் அமைப்புத் தரத்தை உயர்த்திய முக்கியமான பிரிவுகள்.

 

 நீண்ட காலத் தரம்

நீண்ட காலத் தரம்

மூடி அமைப்பு நீண்ட கால வெளிநாட்டு நாணய பத்திர அளவீட்டுத் தரத்தை Baa2யில் இருந்து Baa1ஆகவும், நீண்ட கால வெளிநாட்டு நாணய வங்கி வைப்புத் தரத்தை Baa3யில் இருந்து Baa2ஆகவும் உயர்த்தியுள்ளது. ஆனால் குறு கால வெளிநாட்டு நாணய பத்திர அளவீட்டுத் தரத்தை P-2வில் இருந்து மாறாமல் வைத்துள்ளது.

நீண்ட கால வெளிநாட்டு நாணய வங்கி வைப்புத் தரத்தை P-3யில் இருந்து P-2 ஆக உயர்த்தியுள்ளது.

 

உள்ளூர் நாணயம்

உள்ளூர் நாணயம்

மேலும் உள்ளூர் நாணய வைப்பு மற்றும் பத்திர அளவீட்டுத் தரத்தை ஏ1-இல் இருந்து மாற்றாமல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலத் தரம்

குறுகிய காலத் தரம்

இதனுடன் இந்திய நாணயத்தின் குறுகிய கால உள்ளூர் நாணயத்தின் தரத்தை P-3யில் இருந்து P-2 ஆக உயர்த்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India sovereign ratings upgrades after 14 years, Moody's put Modi safeside

India sovereign ratings upgrades after 14 years, Moody's put Modi safeside
Story first published: Friday, November 17, 2017, 12:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X