நல்லா பாருங்க அப்பு.. இதுல ஏதோ தப்பு இருக்கு.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 4.5% தான்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் ஓட்டு மொத்த வளர்ச்சி குறித்த அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகரான அர்விந்த் சுப்ரமணியன் ஒரு பரப்பரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

 

அதுமட்டும் அல்லாது கடந்த 2011 - 2012 ஆண்டு முதல் 2016 - 2017 ஆம் ஆண்டு வரையிலான பொருளாதார வளர்ச்சியானது 7% என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் சந்தேகம் உள்ளது. இந்த வளர்ச்சி வெறும் 4.5% மட்டுமே வளர்ந்துள்ளதாகவும் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.அதோடு இந்த ஜி.டி.பி டேட்டா puzzle என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய புள்ளியல் அலுவலகம் 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 2017-18 ஆம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சி குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. இதில் இதற்கு முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.98 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக புள்ளி விவரத்துடன் விளக்கியது குறிப்பிடத்தக்கது.

அட என்னப்பா உற்பத்திய விட 14 மடங்கு தேவை அதிகமா இருக்காம்.. அப்புறம் ஏன் விலை அதிகரிக்காது

உற்பத்தி வளர்ச்சி கவலையை உருவாக்கியுள்ளது.

உற்பத்தி வளர்ச்சி கவலையை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த நிதியாண்டில் இதன் வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதம் மட்டுமே இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது காலாண்டில் 6 சதவிகிதமாகவும் நான்காவது காலாண்டில் 5.8 சதவிகிதமாகவும் ஜிடிபி வளர்ச்சி சரிந்தது. இது ஏற்கனவே அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது.

உண்மையான வளர்ச்சியை கணக்கிடுவதில் சாத்தியமாகாது?

உண்மையான வளர்ச்சியை கணக்கிடுவதில் சாத்தியமாகாது?

இந்த நிலையில் முன்னாள் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் பொருளாதார வளர்ச்சி கணக்கீடு குறித்து முக்கிய சில விவரங்களை கூறியுள்ளார். குறிப்பாக பொருளாதார வளர்ச்சியானது 2004-05 வருட அடிப்படையில் கணக்கிடப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென 2011-12 ஆம் ஆண்டு அடிப்படையில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது. இது வெறும் ஒப்பிடுதலுக்கு மட்டுமே சரியாகும். ஆனால் உண்மையில் இதைக் கொண்டு நாட்டின் மொத்த வளர்ச்சியையும் கணக்கிட முடியாது. இது சாத்தியமாகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சி 4.5% மட்டுமே
 

வளர்ச்சி 4.5% மட்டுமே

அதோடு பழைய கணக்கெடுப்போடு ஒப்பிடுகையில், தற்போது வேலையின்மை வெகுவாக அதிகரித்துள்ளது. வேலையின்மை முக்கிய வளர்ச்சியை பெருமளவில் குறைக்கும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இதனால் பொருளாதார வளர்ச்சியில் தனிமனித வளர்ச்சி என்பது பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இழந்தோர் எண்ணிக்கை கொண்டு நாம் கணக்கிட்டால், வருடத்திற்கு வளர்ச்சி வெறும் 4.5 மட்டுமே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது கணக்கிடுதல் படி 7% என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார் சுப்ரமணியன்

தற்போது எதிர்மறையாகவும் வினோதமாகவும் இருக்கிறது.

தற்போது எதிர்மறையாகவும் வினோதமாகவும் இருக்கிறது.

மேலும் உற்பத்தி துறையில் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த பிரிவின் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியில் 15 -17% வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதோடு நாட்டின் வருவாய் 2011க்கு முன்னர் பார்க்கும் போது, நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மற்றும் உற்பத்தி ஏற்றுமதியுடன் நெருக்கமாக வளர்ச்சியடைந்ததை காண முடியும். ஆனால் அதற்கு பின்னர் இந்த உறவு மூறைகள் வலுவாகவும், எதிர்மறையாகவும், வினோதமாகவும் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

இந்து நாட்டிற்கு நற்பெயரை கொடுக்கும்

இந்து நாட்டிற்கு நற்பெயரை கொடுக்கும்

மொத்த உள்நாட்டு வளர்ச்சியை கணக்கிடும் மதிப்பீடு குறித்த கொள்கைகள் தெளிவாகக் இருக்க வேண்டும். இது வெறும் காரணங்களுகாக மட்டும் அல்ல, ஒரு நாட்டின் மீதான நற்பெயரையும் இது தான் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து வேலையின்மை அதிகரித்து வருகிறது

தொடர்ந்து வேலையின்மை அதிகரித்து வருகிறது

மேலும் இந்தியா தொடர்ந்து வேலையின்மையையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக 2019ம் நிதியாண்டில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக என் காலம் முழுவதும் எனது முரன்பட்ட பொருளாதார தரவுகளை பிணைத்தேன். ஆனால் இது குறித்து அரசாங்கத்திற்கு அடிக்கடி சந்தேகங்களை எழுப்பினோம், ஆனால் அது எடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

வளர்ச்சி

வளர்ச்சி

இந்த நிலையில் மோடி அரசு இரண்டு முக்கிய விஷயங்களை கண்கானிக்க வேண்டும், அதற்காக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒன்று மொத்த தேசிய வருமானம் கணக்கு மதிப்பீட்டை மீண்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை மேம்படுத்தும் வகையில் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதோடு புதிய அரசாங்கம் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்த இரண்டிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் ஜீலை 5ம் தேதி சமர்பிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gdp ஜிடிபி
English summary

Arvind Subramanian expressed doubts over India's gross domestic product

Indias economy grew at just 4.5% and not 7%, arvind subramaniam has written article in the Indian express newspaper today.
Story first published: Tuesday, June 11, 2019, 20:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X