சொன்னா கேளுங்கப்பா.. அமெரிக்காவை பகைச்சுக்காதீங்க.. இது நமக்கான சிறந்த தருணம்.. பனகாரியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் : அமெரிக்கா - சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் வர்த்தக போர், இந்தியாவுக்கு மிக சாதகமான விஷயமே என்கிறார் நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார நிபுனருமான அர்விந்த் பனகாரியா.

 

நிதி ஆயோக்கின் துணைத்தலைவராக பணியாற்றிய பனகாரிய, தற்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணி புரிந்து வரும் இவர், நியூயார்க்கில் இந்திய துனைத் தூதரகம் ஏற்பாடு செய்த குழு விவாதத்தில் பேசிய பனகாரியா இந்தியாவுக்கு இது சிறந்த தருணம். பல வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா - சீனாவுக்கும் இடையே நடைபெறும் வர்த்தக யுத்தம், மற்ற நாடுகளுக்கு ஒரு வாய்ப்பு. அதிலும் அமெரிக்காவுக்கு நட்பு நாடாக உள்ள இந்தியாவுக்கு இது சிறந்த வாய்ப்பு என்றும், பன்னாட்டு நிறுவனங்களை தன் பக்கம் ஈர்க்க இது ஓரு சாதமான வாய்ப்பு என்றும் கூறியுள்ளாராம் பனகாரியா.

கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. பள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு.. HCL அதிரடி!

பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்?

பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்?

ஒரு புறம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பிரச்சனை நிலவி வருகிறது. எனினும் பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சனைகள் எளிதில் தீர்க்கபட வேண்டும். அதோடு ஒரு புறம் வரி அதிகம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. மறுபுறம் இந்தியாவோ இதை ஏற்க மறுக்கிறது. ஆனால் இந்த பிரச்சனை விரைவில் பேச்சு வார்த்தை மூலம் விரைவில் தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியம். இரு நாடுகளும் பயன் பெறும் வகையில் இதை செயல்படுத்துவது மிக அவசியம் என்றும் கூறியுள்ளார் பனகாரியா.

மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்?

மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்?

நியூயார்க்கில் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த குழு விவாதத்தில் பேசிய பனகாரியா, அமெரிக்காவுக்கு கொடுங்கள், பின்னர் அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், பேச்சு வார்த்தை மூலம் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் மீதான கட்டணங்களையும் குறையுங்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளாராம்.

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்?
 

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்?

அமெரிக்கா சீனா பிரச்சனையால், பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியே வருகின்றன. இந்த நிறுவனங்களை இந்தியக கரைகளுக்கு கொண்டு வரும் நேரமிது. இதை செய்ய இந்தியா எதை வேண்டுமானாலும் செய்யலாம். இது தான் சரியான நேரம் என்றும் பனகாரியா தெரிவித்துள்ளராம்.

இது தான் சிறந்த தருணம்!

இது தான் சிறந்த தருணம்!

மாற்று இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, இந்தியா ஈர்க்க இது தான் சிறந்த சரியான தருணம் என்றும் கூறியுள்ளாராம். ஆமாங்க அமெரிக்கா சீனா பிரச்சனையால் சீனாவிலுள்ள நிறுவனங்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாமல் போகிறது. இதனால் வேறு இடம் தேடி அலைகின்றன. ஆக இந்த சிறந்த தருணத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பனகாரியா கூறியுள்ளார்.

பெரிய நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற போகின்றன

பெரிய நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற போகின்றன

சீனாவில் உள்ள பெரிய நிறுவனங்கள், அமெரிக்காவின் வரியால் அங்கிகிருந்து வர்த்தகம் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் சீனாவில் அதன் கிளைகளை மூடத் தொடங்கியுள்ளன. ஆக அவர்களுக்கு ஒரு இடம் தேவை படுகிறது. அமெரிக்காவுக்கு நட்பு நாடாக இருக்கும் இந்தியாவுக்கு இதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் கூறியுள்ளார் பனகாரியா.

அந்த வரியால் யாருக்கு நன்மை?

அந்த வரியால் யாருக்கு நன்மை?

குறிப்பாக ஹார்வி டேவிட்சன் வரியை இந்தியா குறைக்க வேண்டும். இதை குறைத்தால் என்ன ஆகி விடப்போகிறது. இன்னமும் இந்தியா உள்நாட்டு உற்பத்தியாளர்களையே பாதுகாத்து வருகிறது. இந்தியா விதித்து வரும் இந்த அதிகபட்ச வரியினால் யாருக்கு என்ன நன்மை நடக்க போகிறது? அதிலும் ஆட்டோ டாரிப்புகள் 100 சதவிகிதத்துக்கும் மேலாக இருக்கிறது. இதனால் யாருக்கு என்ன பயன் என்றும் கூறியுள்ளார் பனகாரியா.

ஏற்றுமதியை அதிகப்படுத்துங்கள்?

ஏற்றுமதியை அதிகப்படுத்துங்கள்?

இந்தியா வரிகளின் ஆதாயம் தேடுவதை நிறுத்திவிட்டு, ஏற்றுமதியின் மூலம் ஆதாயம் தேடலாம் என்றும், இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் பொருளாதார பிரச்சனை உள்ளது. ஆனால் அதற்காக வரியை குறைக்காவிட்டால் அதை சரி செய்ய முடியாது என்றும், கட்டணங்களை கையில் எடுப்பதை விட இந்தியா வேறு ஏதேனும் மாற்று விகிதத்தை யோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

வரி அதிகம்

வரி அதிகம்

இந்தியா அதிகளவு வரி விதிப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். எனினும் இந்தியா கட்டணங்களை ஆதாயாமாக பயன்படுத்துவதை விட, இந்தியா மாற்று விகிதத்தினை அதன் நன்மைக்காகப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார். ரூபாயின் மதிப்பு கொஞ்சம் குறையட்டுமே, இது உங்கள் ஏற்றுமதியாளர்களுக்கான கதவைத் திறக்கும், அதே நேரத்தில் இது கட்டண தாரளமாக்கலுக்கும் ஈடு செய்கிறது. 1990களில் நாங்கள் இதை தான் செய்தோம் என்றும், இது இந்திய பொருட்களை அதிக அளவு ஏற்றுமதி செய்ய உதவும், அதோடு ஏற்றுமதியையும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். அதோடு இதில் இந்தியாவிற்கான நலனையே நான் பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: trade war
English summary

Panagariya said Trade war an good opportunity for India

Panagariya said Trade war an good opportunity for India
Story first published: Thursday, June 27, 2019, 12:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X