ஆடி போய் ஆவணி வரப் போவுது.. இனி தங்கம் விலை இன்னும் பட்டையை கிளப்புமே.. பெண் வீட்டாரே எச்சரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : இந்தியா என்றாலே பண்பாடும் நாகரிகமும் மிகுந்த நாடு என்றும் கூறப்படும். அத்தகைய நம் இந்திய நாட்டில் ஆடி மாதம் என்றாலே பல நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள். இதற்கும் பல காரணங்கள் அறிவியல் ரீதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவு உச்சம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த் நிலையில் நடப்பு மாதம் ஆடி மாதம் என்பதால், அதிகப்படியான நல்ல விஷேங்கள் எதுவும் இல்லை. அதோடு இந்து மதப்படி அதிகப்படியான திருமணங்களும் நடந்திருக்காது. இதனால் தங்கத்தின் இந்த விலையேற்றம் அதிகளவில் மக்களை அதிகம் பாதித்திருக்க வாய்ப்பில்லை.

ஆவணியில் முகூர்த்த தினம் அதிகம்!

ஆவணியில் முகூர்த்த தினம் அதிகம்!

பொதுவாகவே ஆடி மாதத்தில் எந்த திருமணம் உள்ளிட்ட சில நல்ல காரியங்ளை செய்ய மாட்டார்கள் நம்மவர்கள். இந்த நிலையில் ஆடி மாதம் திருமணம் செய்ய முடியாது என்பதால், ஆவணியில் முகூர்த்த நாட்கள் அதிகம் என்பதால், நிறைய திருமண விஷேங்கள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் தங்கத்திற்கான தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் ஆனி மாதத்திலும் சிலர் திருமணம் செய்ய மாட்டார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே அதிக தங்கம் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. இதனால் தங்கத்தின் இந்த தொடர் விலையேற்றம், மக்களை அதிகளவில் பாதித்திருக்க வாய்ப்பில்லை.

இனி தான் பிரச்சனை ஆரம்பம்

இனி தான் பிரச்சனை ஆரம்பம்

இந்த நிலையில் ஆவணி முகூர்த்த தேதிகளில் திருமணம் வைத்திருப்பவர்கள் அதிகளவில் தங்கம் வாங்க வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆமாங்க்.. இன்றளவிலும் தங்கம் தான் திருமணம் செய்யும் பெண்களுக்கு கொடுக்கப்படும் முதல் சீர் வரிசையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தங்கம் தேவை இன்னும் கூடுதலாக தேவைப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தில் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பட்ஜெட்டில் வரி உயர்வு

பட்ஜெட்டில் வரி உயர்வு

ஏற்கனவே தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு இன்னும் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றே கூறலாம். ஆமாங்க.. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 10 லிருந்து 12.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனினும் ஒரு புறம் வரி அதிகரிப்பு விலையை அதிகரித்தாலும், மறுபுறம் இறக்குமதியையும் குறைக்கும் என்றும் நம்பப்பட்டது.

தங்கம் இறக்குமதியும் குறைவு

தங்கம் இறக்குமதியும் குறைவு

இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகியுள்ளது. உலகிலேயே அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அளவில் பாதிக்கும் கீழ்தானாம். இந்த நிலையில் தான் தங்கத்தில் விலை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் கண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தங்கத்தின் அளவு 39.66 டன்னாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஜூன் மாதத்தில் 88.16 டன்னாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் இறக்குமதி அதிகளவில் குறையலாம்!

இன்னும் இறக்குமதி அதிகளவில் குறையலாம்!

சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் விலையினால் நடப்பு மாதங்களில், தங்கம் இறக்குமதி இன்னும் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி வரி அதிகரிப்பால், ஏற்கனவே அதிகரித்துள்ள தங்கத்தின் விலையில், கூடுதல் இறக்குமதி வரியால் இன்னும் விலை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஆபரண தங்கத்தின் விலையில் மேன்மேலும் விலையை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும்

தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும்

ஒரு புறம் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையிலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மறுபுறம் இந்தியாவில் இந்திய டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. மேலும் இறக்குமதி வரி அதிகரிப்பும் கூட சேர்ந்து கொண்டு, அடுத்த ஆவணி மாதத்தில் தேவையும் அதிகரிக்கும் என்பதால், விலை இதுவரை கண்டிராத அளவு உயர வாய்ப்புகள் இருப்பதாக நிபுனர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price will increase in future

Gold price will increase in future
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X