அமிதாப் வீட்டை வாடகைக்கு எடுத்த ஸ்டேட் பேங்க்.. ஒரு மாசம் வாடகை எவ்வளவு தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக மும்பை ஜுஹு பகுதியில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன்-க்கு தொந்தமான கட்டிடத்தின் தரை தளத்தை வாடகைக்கு எடுத்துள்ளது.

மும்பையில் ஜுஹு பகுதி மிகவும் காஸ்ட்லியான ரியல் எஸ்டேட் பகுதி, இப்பகுதியில் ஒரு வீடு அல்லது கட்டிடத்தை வாங்குவதைக் காட்டிலும் வாடகைக்கு இடம் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. காரணம் இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான கட்டிடங்கள் பெரும் பணக்காரர்களுக்குச் சொந்தமானது.

இந்நிலையில் அபிதாப் பச்சன் தனக்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு வாடகைக்கு விட்டு பெரும் தொகையைச் சம்பாதிக்க உள்ளார்.

நெகிழ்ச்சியில் ரத்தன் டாடா.. வெல்கம் பேக் ஏர் இந்தியா.. பழைய புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி..! நெகிழ்ச்சியில் ரத்தன் டாடா.. வெல்கம் பேக் ஏர் இந்தியா.. பழைய புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி..!

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

மும்பை ஜுஹு பகுதியில் அமிதாப் பச்சன் வீட்டுக்கு மிகவும் அருகில் ஒரு கட்டிடத்தைச் சொந்தமாக அவர் வைத்துள்ளார். இந்தக் கட்டிடத்தின் தரை தளத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

இதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அமிதாப் பச்சன் மற்றும் அவரது ஓரே மகனான அபிஷேக் பச்சன் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் படி ஜுஹு பகுதியில் ஜல்சா கட்டிடத்தின் அருகில் இருக்கும் 3,150 சதுரடி அளவிலான வர்த்தகக் கட்டிடத்தின் தரை தளம் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

18.9 லட்சம் ரூபாய் வாடகை

18.9 லட்சம் ரூபாய் வாடகை

சுமார் 15 வருட வாடகை ஒப்பந்தம் படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மாதம் 18.9 லட்சம் ரூபாயை ஒவ்வொரு மாதத்திற்கும் வாடகையாக அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் 25 சதவீத உயர்வு அளிக்கப்பட வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

ரூ. 2.26 கோடி டெபாசிட்

ரூ. 2.26 கோடி டெபாசிட்

இதுமட்டும் அல்லாமல் இந்தக் கட்டிடத்திற்கு டெபாசிட் தொகையாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்-க்கு சுமார் 2.26 கோடி ரூபாய் அளிப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 28ஆம் தேதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிட்டி பேங்க்

சிட்டி பேங்க்

இந்த இடத்தில் முன்பு சிட்டி பேங்க் இருந்தது, சிட்டி வங்கி இந்தியாவில் தற்போது வர்த்தகத்தை மூடும் காரணத்தால் இந்த இடம் காலி செய்யப்பட்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு வழங்கப்படுகிறது.

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு மும்பை ஜுஹு பகுதியில் ஜல்சா, பரிதீக்ஷா, ஜனக், அம்மு, வட்சா போன்ற பல பங்களாக்கள் உள்ளது. கடந்த ஒரு வருடமாகவே மும்பை ரியல் எஸ்டேட் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அதிகமான வாடகை கிடைத்துள்ளது.

பாலிவுட் பிரபலங்கள்

பாலிவுட் பிரபலங்கள்

சமீபத்தில் பாலிவுட் பிரபலங்கள் அதிகளவிலான வீடுகளை வாங்கி வருகின்றனர்.

அபிதாப் அந்தேரியில் 31 கோடி ரூபாய்க்கு டியூப்லெக்ஸ் வீட்டை வாங்கியுள்ளார், ஹிரித்திக் ரோஷன் ஜுஹு வெர்சோவா லிங்க் சாலையில் இரண்டு அப்பார்ட்மென்ட்-ஐ 97.50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார், தர்மா புரெடெக்ஷன்ஸ் சிஇஓ அபூர்வா மேத்தா கார் பகுதியில் 24.60 கோடி ரூபாய்க்கு புதிய அப்பார்ட்மென்ட் வாங்கியுள்ளார்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

ஆலியா பட் பந்திராவில் 32 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அபார்ட்மென்ட்-ஐ வாங்கியுள்ளார், சன்னி லியோன் அந்தேரியில் 16 கோடி ரூபாய்க்கு அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கியுள்ளார். இப்படிப் பல பிரபலங்கள், தொழிலதிபர்கள் மும்பை மற்றும் மகாராஷ்டிர பகுதியில் ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amitabh Bachchan got SBI as new tenant with big rental income in Juhu property

Amitabh Bachchan got SBI as new tenant with big rental income in Juhu property
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X