ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. காக்னிசண்ட் சொன்ன நல்ல விஷயம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், ஒவ்வொரு துறையிலும் பிரச்சனைகள் தலை தூக்கி வருகின்றன. அதிலும் சேவைத் துறையில் சொல்லவே தேவையில்லை.

குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையினைச் சேர்ந்த நிறுவனங்கள் பலத்த அடியை வாங்கி வருகின்றன என்றே கூறலாம்.

ஏனெனில் தகவல் தொழில்நுட்ப முக்கிய வாடிக்கையாளர்கள் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான், கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகின்றது.

கைகொடுத்த கிளவுட் தொழில்நுட்பம்

கைகொடுத்த கிளவுட் தொழில்நுட்பம்

இந்த நிலையில் ஐடி தேவையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடினமான வணிகச் சூழல் இருந்தாலும், கடந்த ஆண்டில் கிளவுட் தொழில்நுட்ப பாதை, நல்லதொரு நிலைபாட்டை ஏற்படுத்த உதவியது என்று காக்னிசண்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்பரிஸ் கூறியுள்ளார்.

நல்ல முன்னேற்றம் கொடுத்தது

நல்ல முன்னேற்றம் கொடுத்தது

மேலும் கடந்த ஆண்டில் நாங்கள் மிகப்பெரிய அளவிலான வேலைகளைச் செய்தோம். இது 2020-க்குள் செல்லும்போது எங்களுக்கு ஓரளவு கைகொடுத்துள்ளது. கடந்த ஆண்டே செலவினங்கள், முதலீடு என பலவற்றை ஆராய்ந்து பின் தான் இதனை தேர்தெடுத்தது நிறுவனம். இதன் விளைவாக கடந்த 2017 முதல் சிறந்த முன்னேற்றத்தினைக் கண்டு வருகிறோம் என்றும் பிரையன் தெளிபடுத்தியுள்ளார்.

20,000 பேரை பணியமர்த்த திட்டம்

20,000 பேரை பணியமர்த்த திட்டம்

ஆக எங்கள் வளர்ச்சிக்கு ஏற்றது இது தான். முன் முயற்சியின் காரணமாக மற்ற நிறுவனங்கள் சிரமப்படும்போது, எங்கள் வணிகத்தில் அதிக முதலீடு செய்வதற்கான திறனை நாங்கள் பெற்றுள்ளோம். 500 வணிக நபர்களுக்கு தொடர்ந்து கட்டணம் வசூலிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மேலும் 20,000 பேருக்கு மேல் கேம்பஸ் இண்டவியூ மூலம் நாங்கள் பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். அதோடு எங்களது டிஜிட்டல் திறன்களையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் பிரையன் தெரிவித்துள்ளார்.

சற்று தாக்கம் இருக்கலாம்

சற்று தாக்கம் இருக்கலாம்

கிளவுட் தொழில் நுட்பத்தினை பொறுத்த வரையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளோம். எனினும் வரும் காலாண்டில் சற்று தாக்கதினை காணலாம். ஆனால் இது பெரும்பாலும் இரண்டாவது காலாண்டில் மட்டுமே இருக்கும். இதனால் எங்களுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் சில சிக்கல்கள் இருக்கும். இது எங்கள் பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதில் தொடந்து வலிப்படுத்துவதில் இருக்கும் என்றும் பிரையன் ஓர் செய்தியறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant CEO said we have committed to continue to hire 20,000 college campus hires.

Cognizant CEO brian Humphries says we have committed to continue to hire 20,000 college campus hires. We have also committed to develop our digital skills.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X