பட்டையை கிளப்ப போகும் தங்கம் விலை.. எதிர்காலத்தில் எப்படி இருக்கும்..நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தங்கம் விலை நல்ல சரிவினைக் கண்டது.

இந்த விலை சரிவு இப்படியே தொடருமா? இனி எப்படி விலையிருக்கும் வாங்கலாமா? வேண்டாமா? இப்படி பல கேள்விகள் நம்மில் எழாமல் இல்லை.

இதற்கிடையில் தங்கம் விலையானது எவ்வளவு சரிந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர்.

அமேசானின் அதிரடி சலுகை.. அதுவும் 80% ஆஃபர்.. என்னென்ன பொருட்களுக்கு.. என்று ஆரம்பம்..!

தங்கம் விலை என்னவாகும்?
 

தங்கம் விலை என்னவாகும்?

இதற்கிடையில் நிபுணர்கள் சொல்வதனைப் போல தங்கம் விலையானது தொடர்ந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது நிபுணர்கள் கூறுவதை போல் அவுன்ஸூக்கு 3000 டாலர்களை தொட்டு விடுமா? அப்படி டாலரின் தொடும் போது இந்தியாவில் தங்கம் விலை என்ன ஆகும். தங்க ஆபரணங்களின் விலை என்ன ஆகும் என்று யோசித்து பார்க்கவே கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது.

சொன்னதெல்லாம் பலித்து விடும் போல இருக்கிறது

சொன்னதெல்லாம் பலித்து விடும் போல இருக்கிறது

ஆனால் தங்கம் போகிற போக்கினை பார்த்தால், நிபுணர்கள் சொன்னதெல்லாம் பலித்து விடும் போல் இருக்கிறது. ஏனெனில் கொரோனா வைரஸ் தாக்கமானது தற்போதைக்கு குறைவதாய் தெரியவில்லை. அமெரிக்காவுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவும் கொரோனாவில் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. சொல்லப்போனால் இன்று உலகிலேயே மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தான் பாதிப்பு அதிகம்.

தேர்தலை எப்படி எதிர்கொள்வார்?

தேர்தலை எப்படி எதிர்கொள்வார்?

இந்தியாவில் இப்படி எனில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வரவிருக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்ற பலத்த போட்டி நிலவி வருகின்றது. இதற்கிடையில் டிரம்ப்புக்கும் ஜோ பிடனுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. அடுத்த மாத தொடக்கத்தில் அதிபர் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பிரச்சாரங்களை எப்படி மேற்கொள்வார். எப்படி தேர்தலை எதிர்கொள்வார் என்ற பரவலான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

தேர்தலை எப்படி எதிர்கொள்வார்?
 

தேர்தலை எப்படி எதிர்கொள்வார்?

இந்தியாவில் இப்படி எனில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வரவிருக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்ற பலத்த போட்டி நிலவி வருகின்றது. இதற்கிடையில் டிரம்ப்புக்கும் ஜோ பிடனுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. அடுத்த மாத தொடக்கத்தில் அதிபர் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பிரச்சாரங்களை எப்படி மேற்கொள்வார். எப்படி தேர்தலை எதிர்கொள்வார் என்ற பரவலான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடத்தில் தஞ்சமடையலாம்

முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடத்தில் தஞ்சமடையலாம்

இதனால் பங்கு சந்தைகள் தடுமாற்றத்தில் உள்ளன. இதனால் டாலரின் மதிப்பில் வேறுபாடு காணலாம் என, முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால் சரிவில் இருந்த தங்கமானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து சுமார் 40% ஏற்றம் கண்டுள்ள தங்கம் விலையானது, இனி எவ்வளவு அதிகரிக்கும் என்றும் பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

பொருளாதார மீட்பு தாமதமாகலாம்

பொருளாதார மீட்பு தாமதமாகலாம்

கொரோனா வைரஸின் தாக்கம் எப்போது குறையும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் சில பகுதிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவின் சில மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக பொருளாதாரம் மீட்பபு என்பது தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இழப்பு அதிகரிக்குமோ?

இழப்பு அதிகரிக்குமோ?

அரசு தரப்பில் லாக்டவுனில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர நினைத்தாலும் அது, பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு அமல்படுத்தாமல் உள்ளது. இதனால் சர்வதேச பொருளாதாரம் இன்னும் மோசமடையலாம் என்ற எண்ணமும் நிலவி வருகின்றது. ஆக கொரோனாவிலிருந்து இன்னும் நாடுகள் மீண்டெழ, இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவினை பொறுத்தவரையில் ஏற்கனவே இறப்புகளின் எண்ணிக்கையானது 1 லட்சத்தினை தாண்டியுள்ளது.

பொருளாதாரத்தினை ஊக்குவிக்க ஊக்கத் தொகை

பொருளாதாரத்தினை ஊக்குவிக்க ஊக்கத் தொகை

அமெரிக்காவின் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இரண்டாவது பெரிய ஊக்கத் தொகையானது வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் வருகிறது. ஆனால் இதுவும் நாளுக்கு நாள் தாமதமாகி வரும் நிலையில், இதுவரை இது குறித்து எந்தவொரு தெளிவான முடிவும் எட்டப்படவில்லை. ஆக இது, ஏற்கனவே பலத்த அடி வாங்கி இருக்கும் பொருளாதாரத்தில், பெரியளவிலான முன்னேற்றத்தினை எட்ட முடியுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

பிரெக்ஸிட் ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

இங்கிலாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பிரெக்ஸிட்டு பிந்தைய வர்த்தக விதிமுறைகளில் முன்னேற்றம் காண அந்நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும் இங்கிலாந்தில் உள்ள உள்சந்தை மசோதா, மேலும் நிச்சயமற்ற தன்மையே காட்டுகிறது. பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தின் சில பகுதிகளை விரிவாக்கி எழுதும் வகையில் ஒரு சட்டத்தினை பிடிட்டீஷ் அரசாங்கம் கொண்டு வர திட்டமிட்டுருப்பதாகவும் தெரிகிறது. இதுவும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிபார்க்கப்படுகிறது.

அமெரிக்கா சீனா பதற்றம்

அமெரிக்கா சீனா பதற்றம்

கடந்த ஆண்டிலிருந்து தங்கம் விலையானது தொடந்து ஏற்றம் கண்டு வருகிறது எனில் அதற்கு முக்கிய காரணங்களில், அமெரிக்க சீனா பதற்றமும் ஒன்று. இந்த நிலையில் இன்று வரையில் அமெரிக்கா சீன பதற்றம் குறைந்தபாடாக இல்லை. இது மேலும் இப்போதைக்கு குறைவதாகவும் தெரியவில்லை. ஆக இதுவும் தங்கம் விலையினை ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்ப்பு

அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸுடன் போராடி வரும் இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் என்னவாகுமோ? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலையினால், தங்கம் விலை என்ன ஆகுமோ? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

உலகின் வலிமையான நபருக்கு கொரோனா

உலகின் வலிமையான நபருக்கு கொரோனா

உலகின் வலிமையான நபருக்கே கொரோனா, நிச்சயம் தங்கத்திற்கு ஆதரவாக செயல்படும் என்கின்றனர் நிபுணர்கள். பொருளாதார மந்த நிலை மற்றும் கொரோனா பரவலுக்கு மத்தியில், நிலவி வரும் நிச்சயமற்ற சூழலில் புகலிடமாக கருதப்படுவது தங்கம் தான். ஆக இது தங்கத்தில் முதலீடு செய்ய தூண்டுகிறது. இது டிரம்பின் தேர்தலுக்கு அச்சுறுத்தலை கொடுக்கிறது. இதன் எதிரொலி பங்கு சந்தைகளில் காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் சாயக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலீட்டாளர்கள் அடுத்து என்ன செய்யலாம்

முதலீட்டாளர்கள் அடுத்து என்ன செய்யலாம்

நிலவி வரும் நிச்சயமற்ற இந்த நிலையில் தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை தொடலாம். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்ற புதிய உச்சத்தினை உடைக்கலாம் என்றும் எதிர்பாக்கப்படுகிறது. ஆக நீண்ட கால நோக்கில் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices will soon hit record high

As per experts, here we are listed some factors to support gold price
Story first published: Sunday, October 4, 2020, 13:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X