புத்துயிர் கொடுத்த அன்னிய முதலீடு.. ரியல் எஸ்டேட் துறையில் அபாரம்.. Colliers மதிப்பீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு இந்த காலண்டர் ஆண்டில் மொத்தம் 9 சதவிகிதம் அதிகரித்து, 43,780 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளதாக குளோபல் ப்ராபர்டி கன்சல்டன்ட் கோலியர்ஸ் தெரிவித்துள்ளது.

புத்துயிர் கொடுத்த அன்னிய முதலீடு.. ரியல் எஸ்டேட் துறையில் அபாரம்.. Colliers மதிப்பீடு..!

இந்த நிலையில் அலுவலக சொத்துக்கள் மொத்த வருவாயில் 46 சதவிகிதம் அதிகரித்து, 20,000 கோடி ரூபாயாக முதலீடுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ரியல் எஸ்டேட் முதலீடு கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 8.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது $6.2 பில்லியன் (43,780 கோடி ரூபாய்) தொட்டுள்ளது என்றும் கோலியர்ஸ் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டில் மொத்த முதலீடுகளில் சுமார் 78 சதவிகிதம் வெளிநாட்டு நிதிகள் ஆகும். இது இந்த ஆண்டில் இது மிக உயர்ந்த பங்கு என்றும் கூறப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் தகவல் தொழில்நுட்பம் தலைமையிலான சந்தைகளான பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே உ:ள்ளிட்ட இடங்களில் வலுவான தேவை இருப்பதால், அலுவலக சொத்துகளில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், இது முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளையும் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வர்த்தக ரீதியான சொத்துகளில் 46 சதவிகிதம் முதலீடு அதிகரித்துள்ளதாகவும், மொத்தம் 2.8 பில்லியன் டாலர் (19,900 கோடி ரூபாய்) முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த துறையில் உள்ள வலுவான தேவை மற்றும் வாடகையே என்றும் கூறப்படுகிறது.

இதனால் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கும் வர்த்தக ரீதியான அலுவலகங்களுக்கு வலுவான தேவை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது வலுவான தேவை மற்றும் அதிகரிக்கும் வாடகையினாலும் இது ஆதரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்து வரும் 2020ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டில் வணிக முதலீடுகள் விரைவாக அதிகரிக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் கோலியர்ஸ் தெரிவித்துள்ளது. அலுவலகத் துறையில் நல்ல வளர்ச்சியை கண்டிருந்தாலும், இந்தியா குடியிருப்பு துறையில் நீண்டகாலமாகவே மந்த நிலையை கண்டு வருகிறது. ஏனெனில் இது 2019ம் ஆண்டில் மொத்த முதலீடுகளில் 9 சதவிகிதம் மட்டுமே பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் பணப்புழக்கக் கவலைகள் நீடித்திருப்பதால், இத்துறையில் முதலீடுகள் கொஞ்சம் மென்மையாகத் தான் இருக்கும் என்றும் கோலியர்ஸ் எதிர்பார்க்கிறது.

எனினும் இதில் நல்ல செய்தி என்னவெனில் தற்போதைய பொருளாதார மந்த நிலை இருந்த போதிலும், வெளிநாட்டு நிதிகள் ரியல் எஸ்டேட் துறையில் வலுவான இடத்தை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் டெல்லி என்சிஆரை விட பெங்களூரூ முந்தியதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Real estate investments increased 9% to Rs.43,780 crore during this calendar year

Real estate investments increased 9% to Rs.43,780 crore during this calendar year. Colliers said its expected investments in the residential segment to remain soft during 2020, due liquidity crunch in NBFC remain. Commercial office investments were better than past year.
Story first published: Thursday, December 19, 2019, 19:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X