2020இல் வளைகுடா நாட்டு மக்களிடம் பணமே இருக்காதாம்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் பொருளாதாரம் மிகவும் வேகமாக மாறி வருகின்றது. இந்த மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளாத நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களில் தத்தளித்து வருகின்றன. அதே சமயம் தன்னை உலகச் சந்தையில் முதன்மையான நிலையில் தக்கவைத்துக்கொள்ள, சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ள நாடுகள் பொருளாதார வல்லரசாக உருமாறி வருகின்றன.

 

உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கிய இடம் வகிக்கும் மிக முக்கியமான நாடு ஐக்கிய அரபு குடியரசாகும். கச்சா எண்ணெய், வங்கியியல், சுற்றுலா, பணப் பரிமாற்றங்கள் என ஒவ்வொரு நாளும் பலஆயிரம் கோடி ரூபாய் பணப்புழக்கத்தில் ஈடுபடும் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்குகிறது ஐக்கிய அரபு நாடுகள்.

 டிஜிட்டல் உலகம்

டிஜிட்டல் உலகம்

இன்றைய சூழலில் மாறி வரும் பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்கும் விதமாக ஐக்கிய அரபு குடியரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறி வருகின்றது.

வளைகுடா நாட்டின் 75 சதவீத பணப் பரிவர்த்தனை பணத்தை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு இருந்தும் 2020ஆம் ஆண்டிற்குள் பணமற்ற சமுதாயமாக மாறி விட வேண்டும் என்கிற ஒரு கடினமான இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கி உள்ளது.

 

இலக்கு

இலக்கு

இது ஒரு அசாத்தியமான இலக்காக இருந்தாலும், அந்த நாட்டின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்கும் பொழுது, எந்த ஒரு அசாதரமாண இலக்கையும் சாதாரணமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் அந்த நாட்டிற்கு உண்டு என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

2020ஆம் ஆண்டுக்குள்
 

2020ஆம் ஆண்டுக்குள்

ஏனெனில் யாருமே கற்பனை செய்ய இயலாத இலக்குகளான உலகின் மிக உயரமான கட்டிடம் மற்றும் உலகின் மிகப்பெரிய மால் போன்றவற்றை ஏற்கனவே சாத்தியமாக்கியுள்ளது.

மேலும் 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெருக்களில் பறக்கும் வாகனம், ஓட்டுநர் இல்லாத டாக்சிகள் மற்றும் ரோபோ காவல்துறை போன்றவற்றை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

இந்தப் பின்னணியில் நாம் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கும் பொழுது, ஐக்கிய அரபு அமீரகம் கிட்டத்தட்ட 2020 க்குள் இதைச் சாத்தியப்படுத்தி விடும் என்பதை நாம் கண்டிப்பாக நம்பலாம்.

 

இது சாத்தியமா?

இது சாத்தியமா?

கண்டிப்பாக இது சாத்தியமே. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் அதிகமானவர்களிடம் மொபைல் ஃபோன் உள்ளது.

உலகளாவிய தகவல் நிறுவனமான, நீல்சனின் கூற்றுப்படி, ஒவ்வொரு 100 யுஐஏ குடிமக்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 78 நபர்களிடம் ஸ்மார்ட் போன் உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறுவதில் ஐக்கிய அரபு அமீரக மக்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

 

இளம் தலைமுறை மக்கள்

இளம் தலைமுறை மக்கள்

அங்குள்ள இளம் தலைமுறையினர் தொழில்நுட்ப ஆர்வலராகவும், ஸ்மார்ட் போனை வாங்கும் வசதி படைத்தவர்களாகவும் உள்ளனர். மேலும், வளர்ந்த நாடுகளை விட வளர்ந்து வரும் நாடுகள், சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக அறியப்படுகிறது.

3 பில்லியன் டாலர் சந்தை

3 பில்லியன் டாலர் சந்தை

உண்மையில், நிதி பரிவர்த்தனையில் மக்களின் வசதிக்காக டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விருப்பம் ஜிசிசி க்கு உள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் யூஏயில் மட்டும், இத்துறை 3 பில்லியன் டாலர் சந்தையைக் கொண்டிருக்கும்.

தொழில்நுட்ப புரட்சி

தொழில்நுட்ப புரட்சி

நவீன தொழில் நுட்பம், பணம் செலுத்தும் இடத்தில் கணிசமான பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. பாரம்பரிய பணப்பைகளை இப்போது எளிதாக மொபைல் போன் வேலெட் மூலம் மாற்ற முடியும். வங்கியின் கிளையைப் பார்வையிட்டு வாடிக்கையாளர் செய்ய வேண்டிய பெரும்பாலான பரிவர்த்தனைகளை இப்போது ஆன்லைன் அல்லது மொபைல் பேங்கிங் மூலமாக மட்டுமே மிகவும் எளிதாகச் செயல்படுத்தி விட முடியும்.

பாதுகாப்புச் சார்ந்த கவலைகள்

பாதுகாப்புச் சார்ந்த கவலைகள்

மின்னணு பணப் பரிவர்த்தனை மிகவும் விரைவாகப் புதிய நெறிமுறையாக மாறிவருவதால், பணமில்லா சமுதாயம் ஒரு பெரிய யதார்த்தமாக மாறி வருகின்றது. இது மிகவும் வலுவான பாதுகாப்பு அம்சத்திற்கான தேவையை அதிகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அம்சமானது மக்களின் பரிவர்த்தனையைக் கட்டுப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

பணமில்லாத பணம் பரிவர்த்தனைகள் மட்டுமே நிதிச் சந்தையின் எதிர்காலம்; இருப்பினும், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீதான விவாதம் தீர்க்கப்பட வேண்டும்.

 

மோசடிகளும் பாதுகாப்பும்

மோசடிகளும் பாதுகாப்பும்

மோசடி மற்றும் மோசடிகளைத் தடுக்கத் தவறியது போன்றவை பாதுகாப்பான தீர்வுகள் இல்லாமல் இல்லை. பாதுகாப்பு அம்சங்களைத் தகுந்த முறையில் நடைமுறைப்படுத்தாததால் ஏற்படுகின்றன. தற்போது, சந்தையில் பல பாதுகாப்புத் தீர்வுகள் உள்ளன, அவை அனைத்தும் சரியாகவும் உறுதியாகவும் செயல்படுத்தப்பட்டால், பெரும்பாலான மோசடிகளைத் தடுக்க முடியும்.

சாமானியர்கள்

சாமானியர்கள்

சராசரி நபர் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய சொத்துக்களைப் பாதுகாக்க கூடிய மிக உயர்ந்த பாதுகாப்பு அளவை விரும்புவார்கள். ஆனால் நடைமுறையில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்களைத் தாங்கலே சிரமப்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் வேகமான, தடையற்ற பணப் பரிவர்த்தனையின் போது, நீண்ட மற்றும் சிக்கலான கடவுச்சொற்களை நினைவில் வைத்துக் கொள்வது அல்லது டோக்கன்களைச் சுற்றிப் பயணிப்பதை விரும்பவில்லை.

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகள்

டிஜிட்டல் நிதிகளை முன்னிலைப்படுத்தி, மொபைல் போன்களுக்கான தொழில்நுட்பம் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதன் குடிமக்களுக்குக் கற்பித்துப் பணமில்லா சமுதாயத்தை நோக்கி ஐக்கிய அரபு அமீரகம் மிக வேகமாக முன்னேறி வருகின்றது.

முன்னுரிமை

முன்னுரிமை

ஸ்மார்ட் அரசாங்கமாக மாறும் முயற்சியின் படி 2020 ஆம் ஆண்டிற்குள் யு.ஏ.ஏ. டிஜிட்டல் நிதித் தளத்திற்கு மாற முன்னுரிமை அளித்துச் செயல்படுத்தி வருகின்றது. அந்த நாட்டின் 2021 ஆம் ஆண்டிற்கான தொலைநோக்கு பார்வை அறிக்கையில் டிஜிட்டல் பணப்ப்பரிவர்த்னைக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தைச் செயல்படுத்தும் விதமாக அனைத்து விதமான பூர்வாங்கப் பணிகளும் முடக்கி விடப்பட்டுள்ளன.

எமிரேட்ஸ் டிஜிட்டல் வேலெட்

எமிரேட்ஸ் டிஜிட்டல் வேலெட்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மொபைல் வேலெட் முன்முயற்சி எமிரேட்ஸ் டிஜிட்டல் வேலெட் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. இது வங்கிகள், பணப்பரிமாற்ற நிறுவங்கள், பங்குச் சந்தை மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உட்பட முழு நிதிச் சந்தையையும் இணைக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊதிய பாதுகாப்பு அமைப்பு, ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும் 4.7 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மின்னணு முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது ஐக்கிய அரபு அமீரக்த்தைன் பணமில்லா சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகின்றது.

 மொபைல் வேலெட்

மொபைல் வேலெட்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக இயக்குவதற்கு, வங்கிகள், மொபைல் பணம் செலுத்தும் நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், வங்கிகளுக்கு, அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM), பணப்பரிவர்த்தனை வழங்குநர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களான சாம்சங், ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி பெரும் ஆபத்தாக மாறி வருவதாதக வல்லுநர்கள் சிலர் நினைக்கலாம்.

நீண்ட பயணம்

நீண்ட பயணம்

எனினும் வங்கிகள் இத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சியைத் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகக் கருதவில்லை. மாறாக இது பணப்பரிவர்த்தனையை மிக எளிதாகச் செயல்படுத்த உதவும் எனக் கருதுகின்றன. உண்மையில், வங்கிகள் நிதியியல் சேவைகளை வழங்குவதில் வல்லுநர்களாக விளங்குகின்றன. மேலும் வங்கிகள் தங்களுடைய சேவைகளை டிஜிட்டலுக்கு மாற்றுவதில் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளன.

வங்கி தொழில்நுட்பம்

வங்கி தொழில்நுட்பம்

மொபைல் வேலெட் என்பது வங்கித் தொழில் நுட்பத்தின் எதிர்காலம். மேலும் இது வங்கிச் சேவைகளில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகச் சேர்க்கப்படுகின்றன. சமீபகாலமாக வங்கிகள் கடந்த காலங்களில் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்குப் பின் மீண்டு வரும் நோக்கில் தங்களைக் கட்டமைத்து வருகின்றன. அதன் விளைவாக, நிதிச் சந்தை சார்ந்த தொழில்நுட்பத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தவில்லை.

இதன் விளைவாக வங்கி அல்லாத பிற நிறுவனங்கள் நிதிச் சந்தையில் நுழையச் சத்தமில்லாமல் நுழைய வங்கிகள் அனுமதித்தன. இருப்பினும், தற்பொழுது நிலைமை விளையாட்டு மாறிவிட்டது, பெரும்பாலான வங்கிகள் பெருமளவில் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் முதலிடத்தில் திகழ அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன.

 

வங்கிகள்

வங்கிகள்

டிஜிட்டல் மயமாக்கலின் நன்மைகள் குறித்து வங்கிகளுக்குத் தெளிவான பார்வை உள்ளது. மொபைல் பணப்பரிமாற்றம் வங்கிகளின் அனைத்துச் சேவைகளை உள்ளடக்கிய கட்டண சுற்றுச்சூழல் அமைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்கின்றன.

பொருளாதாரம்

பொருளாதாரம்

மொபைல் வேலெட் என்பது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பிற உபகரணங்களைப் போன்றது. மேலும் இதைத் தேவை இருக்கும் பொழுது மட்டுமே உபயோகிக்கலாம். மொபைல் வேலெட், பணப் பரிவர்த்தனை வலைத் தளம், மற்றும் பிற நிதிச் சேவைகளை வங்கிகள் பரந்த அளவில் வழங்கி வருகின்றன. நிதிச் சந்தையில், வேலை வாய்ப்பு, நிதிப் பரிவர்த்தனை மற்றும் பிற நிதிச் சார்ந்த சேவைகளை வழங்குவதன் மூலம், ஒரு நாட்டினுடைய பொருளாதார மைய அச்சாக வங்கிகள் விளங்குகின்றன.

 நிதி நிறுவனங்கள்

நிதி நிறுவனங்கள்

நிதி நிறுவனங்களுக்கு முன் தற்பொழுது உள்ள சவால், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் பிரதான வங்கியாக மாறுவது மட்டுமே. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குப் பயன்பாட்டு, கட்டுப்பாட்டு, செயல்பாடு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சேவையை வழங்க வேண்டும்.

மேலும் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் தளங்களுக்கு மாறுவதற்குப் பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தளத்தில் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்க இயலும்.

 

உஷாரா இருங்க..

உஷாரா இருங்க..

<strong>ஷாப்பிங், ஹோட்டல் செல்லும்போது உஷாரா இருங்க.. இன்று முதல் புதிய ஜிஎஸ்டி வரி அமலாக்கம்..!</strong>ஷாப்பிங், ஹோட்டல் செல்லும்போது உஷாரா இருங்க.. இன்று முதல் புதிய ஜிஎஸ்டி வரி அமலாக்கம்..!

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

<strong>ரூ.30 லட்சத்திற்கு சொத்துக்களை வாங்கியவர்களுக்கு வலை வீசும் வருமான வரித்துறை..!</strong>ரூ.30 லட்சத்திற்கு சொத்துக்களை வாங்கியவர்களுக்கு வலை வீசும் வருமான வரித்துறை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Will the UAE be cashless by 2020?

Will the UAE be cashless by 2020?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X